2 ஆண்டுகள் எலிகளுக்கு காபி, டீ கொடுத்த ஆராய்ச்சி முடிவில் என்ன நடந்தது தெரியுமா!!!
after a study that gave rats coffee and tea for 2 years result diabetes and obesity
சர்க்கரை நோய் குறித்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலுள்ள 'டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்' நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில எலிகள் மூலம் ஆராய்ச்சி செய்தனர்.அப்போது சில எலிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 தடவை 100 மில்லி லிட்டர் அளவுள்ள சர்க்கரை கலந்த இனிப்பான காபி, டீ மற்றும் குளிர்பானங்களை கொடுத்தனர்.

ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்பானம், டீ மற்றும் காபி வழங்கப்பட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகள் நடந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து எலிகளுக்கும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது.
இதன் மூலம் ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ ,காபி குடிப்பவர்களுக்கு டைப்-2 சக்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய ஆராய்ச்சி அமெரிக்கா தேசிய சுகாதார நிறுவன ஆய்வு மூலம் உலகளாவிய உணவு முறை தளர்வுகளுடன் ஒப்பிடப்பட்டன. டீ, காபியிலுள்ள சுக்ரோஸ் என்ற அமிலம் கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை இல்லாத டீ, காபி குடிக்க முயற்சி செய்யுங்கள். குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என அவர்கள் தெரிவித்தனர்.தற்போது இந்தத் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி பலர் இனிப்புகளை விட்டுவிடுங்கள் என்றபோதெல்லாம் அதைக் கண்டு சிரித்தோம்.இனியாவது விழிப்புணர்வுடன் நம் உடலை காப்பதில் ஆர்வம் காட்டுவோம் என் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
English Summary
after a study that gave rats coffee and tea for 2 years result diabetes and obesity