முக்கிய விவகாரத்தில்... அர்ஜுன் சம்பத் அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக சென்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிப்பதற்கு  இங்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். 

இதனால் இந்து மக்கள் கட்சியினர், காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சற்று பரபரப்பு நிலவியது. 

இதனை தொடர்ந்து, இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 43 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்று  வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arjun sambath arrested july


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->