ஆர்ம்ஸ்ட்ராங் கொலை: திமுக அருள் போட்ட பிளான்! காங்கிரஸ் அஸ்வத்தாமன் தந்தை கொடுத்த வாக்குமூலம்!  - Seithipunal
Seithipunal


ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள ரவுடி நாகேந்திரன் அளித்துள்ள வாக்குமூலம் குறித்த பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில், திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வகிளாலும் அடங்குவர். கைதுக்குப்பின் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இதில், முக்கிய குற்றவாளியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் மற்றும் அவரின் தந்தை நாகேந்திரன், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள் உள்ளிட்டவர்கள் இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரிய வந்திருந்தது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ஆம்ஸ்ட்ராங் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

அதன்படி, திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள் (அருள் ஆற்காடு சுரேஷின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது) தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டத்துடன், நாகேந்திரனை அணுகி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலைக்கான செலவை நாகேந்திரன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது. 

ரவுடி நாகேந்திரனின் மகன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனிடம் தான் வழக்கறிஞர் அருள் இந்த கொலைக்கான திட்டத்தை, குரோம்பேட்டை மருத்துவமனையில் வைத்து தெரிவித்துள்ளார். 

அஸ்வத்தாமன் தனது தந்தையிடம் இது குறித்து தெரிவிக்கவே, அவர் இது நல்ல வாய்ப்பு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்ஸ்ட்ரங்கை தீர்த்த கட்ட வேண்டும். இதற்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

மேலும், ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்தி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியதாகவும் நாகேந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong Hacked to Death Case Shocking info now


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->