#தருமபுரி || பாமக வேட்பாளர்களின் கையில் பேரூராட்சி.! அதிமுக, திமுக செய்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் பாமக வேட்பாளர் மற்றும் சுயச்சை வேட்பாளர்களின் முடிவைப் பொறுத்தே, யார் அரூர் பேரூராட்சியை கைப்பற்றுவார் என்று முடிவாகும் நிலை உருவாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திராவிட முன்னேற்றக் கழகம் 7 இடங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதேசமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக, அதிமுக தலா ஏழு இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், பாமக - சுயேச்சை வேட்பாளர்கள் முடிவைப் பொறுத்தே எந்த கட்சிக்கு பேரூராட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்று தெரியவரும்.

இதற்கிடையே, செங்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 9 இடங்களிலும், அதிமுக எட்டு இடங்களிலும் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள ஒரு வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அருள்ஜோதி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

அவருடைய வாக்கு யாருக்கு என்று கேள்வி எழுந்த நிலையில், அவருடைய ஆதரவை பெறுவதற்காக திமுகவினர் அவரை கடத்திச் சென்றதாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்த காணொளிகளும் தற்போது வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ARUR PMK CANDIDATE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->