ஜாமீனில் இன்று விடுதலையாகும் அரவிந்த் கெஜ்ரிவால்?
Arvind Kejriwal released on bail today
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
பின்னர் இந்த விவகாரத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் கடந்த மார்ச் 21 ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் கடந்த ஜூன் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஜாமீன் கோரியிருந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கபட்டது. மேலும்
சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையான போது திடீரென சி.பி.ஐ. அவரை கைது செய்தது. தொடர்ந்து அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நிதிமனஞ் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில், தனது கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் அவர் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவை நீதிபதி சூர்யா கந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
English Summary
Arvind Kejriwal released on bail today