கரூர் ஐடி ரெய்டு.. அசோக்குமார் ஆஜராக மீண்டும் சம்மன்.!! சாட்டை சுழற்றும் வருமான வரித்துறை.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு உட்பட 200க்கும் மேற்பட்ட அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்ற நிலையில் ஜூன் 7ம் தேதி நேரில் ஆஜராகுமாறு முதலாவது சம்மன் அனுப்பப்பட்டது. 

ஆனால் அசோக் குமார் ஆஜராகவில்லை. இதன் காரணமாக மீண்டும் ஜூன் 19ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு 2வது சம்மன் அனுப்பப்பட்டது

இந்த முறையும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை. வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3வது முறையாக வருமானவரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் வரும் 27ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என வருமானவரித்துறை அனுப்பிய சம்மனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வருமானவரித்துறை அனுப்பிய 3வது சம்மனுக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராகாத பட்சத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்று முடிந்த பிறகு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தற்போது எங்கு உள்ளார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவர் கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக தலைமறைவாக உள்ளதாகவும் பரவலாக பேசப்படுகிறது. இதற்கிடையே வருமான வரித்துறை அனுப்பிய மூன்றாவது சம்மனுக்கும் அசோக்குமார் ஆஜராகாத பட்சத்தில் வருமானவரித்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அசோக்குமாருக்கு எதிராக லுக் அவுட் பிறப்பிக்கவும் வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashokumar summoned for 3rd time by the IT Dept


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->