சூடு பிடிக்கும் சட்டசபை தேர்தல்!...ஜம்மு காஷ்மீரில் மோடி இன்று பிரச்சாரம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, 
வரும் 18ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தலும், தொடர்ந்து வரும்  25ம் தேதி 2ம் கட்ட தேர்தல் மற்றும் அக்டோபர் 1ம் தேதி  மூன்று கட்ட தேர்தல் என்று மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.  

இந்த தேர்தலில் காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி இணைந்து போட்டியிடும் நிலையில், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சிகள் தனியாக தேர்தலை எதிர்கொள்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால்,  அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. 

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் அங்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசும் நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஜம்முவில் பாஜக 43 இடங்களில் போட்டியிடும் நிலையில், கடந்த தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கிடையே 1982-ம் ஆண்டுக்குப் பிறகு தோடா மாவட்டம் செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assembly elections are going to heat up Modi is campaigning in Jammu and Kashmir today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->