ஜெயலலிதா பேசிய வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி! முட்டி மோதும் திமுக! - Seithipunal
Seithipunal


2021ல் அதிமுக ஆட்சி முடிவில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் சுமார் 90% பணிகள் முடிவுற்றிருந்தன. எஞ்சிய 10% பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் நிலையில் இருந்தது என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் சுமார் 60 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அறிவித்தார்கள்.

அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு 2019ம் ஆண்டு, ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் மாநில நிதியின் கீழ், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தேன்.

இத்திட்டத்தின்படி பவானி ஆற்றின் உபரி நீரான 1.5 டி.எம்.சி தண்ணீரினை காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து நீரேற்று முறையில் குழாய்களின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலுள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குட்டைகளும், சுமார் 24,500 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும். 2021ல், எங்களது ஆட்சி முடிவில், சுமார் 90 சதவீத பணிகள் முடிவுற்றிருந்தது.

எஞ்சிய 10 சதவீத பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் நிலையில் இருந்தது. அஇஅதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டது இந்த விடியா திமுக அரசு. நான் பலமுறை சட்டமன்றத்திலும், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாயிலாக பேட்டிகள், அறிக்கைகள் மூலமாகவும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முடிக்க வலியுறுத்தியும், 3 ஆண்டுகள் கழித்து ரூ.250 கோடி கூடுதல் செலவில், எஞ்சிய 10 சதவீதப் பணிகளை முடித்து, இன்றுதான் பொம்மை முதலமைச்சர் திறந்துள்ளார்.

இதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே எஞ்சியப் பணிகளை முடித்து திறந்திருந்தால், மூன்று மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவை மற்றும் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

இதுபோல ஏற்கனவே சேலம் மாவட்டம், தலைவாசலில் எங்கள் ஆட்சியில் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்றும், கிடப்பில் போட்டுள்ள காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும் என்றும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Athikadavu Avinashi Project DMK MKStalin Gundaru ADMK EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->