கை மாறிய ரூ.53,00,000 லட்சம் அவாலா பணம்! சிக்கிய பெரும் புள்ளிகள்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்தில் ரூ.53 லட்சம் அவாலா பணம் சிக்கி உள்ளதாகவும் அது தொடர்பாக நகைக்கடை அதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காந்திநகர் சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு பேரும் ஒரு பையை மற்றும் பேக்கை கைமாற்றி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், பரமக்குடி வலையந்தல் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் வைத்திருந்த பேக் மற்றும் பையை திறந்து பார்த்தனர் அவற்றில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இரண்டு பைகளில் இருந்த ரூ. 52,92,200 பணத்தை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு வரப்பட்டது? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக இளையான்குடி புதுரை சேர்ந்த பன்னீர் என்பவரை உடனடியாக பிடித்து காவல்துறை விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய நபர்களுக்கு தொடர் இருப்பதாக தெரிய வருகிறது பிடிபட்ட பிரபாகரன் நகைக்கடை நடத்தி வந்துள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை கவிதாஸ் என்பவர் அதிக அளவில் பணம் கொடுத்து பரமக்குடியில் செல்வியிடம் பிரித்துக் கொடுக்கக் கூடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் பிரபாகரன், பன்னீர்,கவிதாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Awala money of Rs53 lakh seized in Ramanathapuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->