ஆந்திராவில் ஜெகனுக்கு பின்னடைவு! 10  சீட் கூட தேறாது!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுடன் ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திராவில் தனித்து போட்டியிடுகிறது.  ஜெனுக்கு  எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும்  பிஜேபி  ஆகிய காட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 

ஆந்திராவிலும்  ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரையிலான கருத்து கணிப்புகளில்  ஜெகனின் கையே ஒங்கி இருந்தது.  ஆனால்,  தற்போது  வரும்  கருத்து கணிப்புகள் ஒய் எஸ் ஆர் கட்சிக்கு மகிழ்ச்சி தரும்படி இல்லை.  

ஒரு தனியார் டிவி கடந்த மாதம் வெளியிட்ட கருத்து கணிப்பில் மொத்தம் உள்ள 25 இடங்களில் 18 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்றும்,  ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 7 தொகுதிகள்தான் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.

ஆனால், தற்போது India TV-CNX வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்து கணிப்பிலும்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவுதான் என்கிறது.  2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 22 இடங்களை கைப்பற்றியது.  ஆனால், தெலுங்கு தேசம் கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே கிடைத்தது.  

ஆந்திராவில் தற்போது ஆளும்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபா தேர்தலில்  ஆளும் மொத்தம் உள்ள 25 இடங்களில் 10 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கிற India TV-CNX கருத்து கணிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Backlash for Jagan in Andhra Pradesh! Not even 10  seats!!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->