வாக்காளர்களுக்கு கொடுத்த 'குக்கர் வெடித்து' பெண் படுகாயம்!
bangalore cooker blast election
கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச குக்கர் வெடித்த சம்பவம் வெறும் பரபரப்பையும், அதிர்ச்செய்யும் ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு உண்டான யூகத்தை வகுத்து, தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.
அதேபோல், காங்கிரஸ் இந்த முறை எப்படியாவது எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்து சிதறிய சம்பவம், வாக்காளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் மாநகரின் ஒரு காலனி பகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சமையல் குக்கர்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இப்படி கொடுத்த இலவச குக்கரில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியதில், பெண் ஒருவருக்கு கை, கழுத்து, முகம் உள்ளிட்டவற்றில் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் இலவச குக்கர் வாங்கிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
English Summary
bangalore cooker blast election