40 தொகுதியிலும் "விவசாயி" சின்னத்தில் களமிறங்கும் கட்சி.!! அதிர்ச்சியில் சீமான்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வரும் மே மாதம் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிகளில் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றன. 

இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சி ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் பெறாததால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்துள்ளது. 

இதனால் அதன் சின்னமாக கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிதா என்ற கட்சியிடம் இழந்துள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் நாம் தமிழர் கட்சியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் எதிர் வரும் மக்களவை பொதுத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் விவசாயி சின்னத்தில் போட்டியிட போவதாக பாரதிய பிரஜா ஐக்கிதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் சீமான் அதிர்ச்சியில் உரைந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் புலம்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BAP contest tamilnadu puducherry in farmer symbol


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->