#சற்றுமுன் || விராட் கோலியின் 100-வது டெஸ்ட்., ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டம் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் ஆட்டமாகும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குறைந்துள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. 

கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்றஇந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை.

மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்நிலையில், மொகாலியில் வரும் 4ஆம் தேதி தொடங்கும் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண 50% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி பிசிசிஐ  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பிசிசிஐ இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BCCI INDvsSL


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->