ஆக்டோபஸ் அண்ணாமலை மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது! டாக்டர் ஃபீஸை நாங்க கட்டுறோம் - அதிமுக! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் அன்னதான விழா நடைபெற்றது. இந்த விழாவில் இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய  அவர், வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை மன அழுத்தத்தில், மனநலம் பாதிக்கப்பட்டது போல் பொது கூட்டத்தில் பேசியிருக்கிறார். அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று விமர்சித்தார். மேலும் பதவி வெறி மற்றும் மோகத்தினால் மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார்.

எந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வேர்வை சிந்தாத அண்ணாமலை, மனநல மருத்துவரை அணுக வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். மதுரையில் நல்ல மருத்துவரை ஆலோசனைக்கு அனுப்புகிறோம் என்றும், அதற்குரிய செலவு முழுவதையும் அண்ணா திமுக ஏற்கும் எனவும் கூறினார். 

அதிமுக கட்சியை டெண்டர் கட்சி என்று கூறுகிறீர்கள், ஆனால் உங்கள் கட்சி தான் டெண்டர் கட்சி. உங்கள் கட்சியில் தான் மோசடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை , கொள்ளை பின்புலத்தில் உள்ளவர்கள் உங்கள் அடைக்கலத்துடன் பாஜகவில் உள்ளனர்.அரசியல் நாகரிகம் இல்லை.. உழைப்பு இல்லை என எதுவுமே அண்ணாமலைக்கு கிடையாது என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Better see Octopus Annamalai Psychiatrist We bind Dr Fees AIADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->