பாரத் ஜோடோ நடை பயணத்தில் தெலுங்கானாவில் தெறித்து ஓடிய ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'ஒற்றுமைக்கான பயணம்' என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 150 நாள்கள் பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நான்காவது நாளாக நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்ட பந்தயம் விளையாடினார். அப்போது சிறுவர்களுடன் போட்டி போட்டு கொண்டு சாலையில் தெறித்து ஓடிய ராகுல் காந்தியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat jodo Yatra Rahul Gandhi running race with childrens in Telangana


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->