அடுத்த ட்விஸ்ட்.. ஜனவரி 2ல்.. ஒரே மேடையில் மோடி, ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் 130க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கொரோன  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பட்டமளிப்பு விழாவை நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அதன் காரணமாக பட்டமளிப்பு விழா நடைபெறாத பல்கலைக் கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான தேதியை ஒதுக்கியது தமிழக அரசு.

அதன்படி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்கு 1,528 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் அரங்கில் 600 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் முக ஸ்டாலினும் ஒரே நிழச்சியில் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bharathidasan university convocation ceremony narendra modi mkstalin attendance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->