மக்களவையின் இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் ..! பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த இந்தியா கூட்டணியினர்..!
Bhartruhari Mahtab Taken Oath as Pro Tem Speaker in Loksabha
தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதையடுத்து கடந்த ஜூன் 9ம் தேதி பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அனைவருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 18 ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்றத் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், தற்காலிக சபாநாயகர் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து மற்ற மக்களவை உறுப்பினர்கள் 280 பேர் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். தொடர்ந்து நாளை 263 மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
இதையடுத்து ஜூன் 26ம் தேதி மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும். முன்னதாக மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹதாப்பிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை இந்தியா கூட்டணி எம். பி. க்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். 8 முறை எம். பி. யாக இருந்த கேரளாவின் கொடிகுன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல் 7 முறை எம். பி. யாக இருந்த பர்த்ருஹரி மஹதாப்பை நியமித்ததற்கு கண்டனம் தெரிவித்து இந்தியா கூட்டணி இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது.
English Summary
Bhartruhari Mahtab Taken Oath as Pro Tem Speaker in Loksabha