தேனியில் பெரும் பரபரப்பு!...அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! - Seithipunal
Seithipunal


தேனி அருகே  அ.தி.மு.க. நகர செயலாளர் வீட்டின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அ.தி.மு.க. நகர செயலாளராக பிச்சை கனி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு  தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தேனி மாவட்ட எஸ்.பி. மற்றும் போடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதிகாலை நேரத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் வீட்டின் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Big excitement in theni aiadmk executive house petrol bombed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->