விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு - அதிரடியாக அறிவித்த ஒரே முதலமைச்சர்.! பச்சைக்கொடி காட்டிய பாஜக.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், (பாஜக உட்பட) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவிக்கையில்,

"சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க இந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அமைச்சரவை முடிவு எடுக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான குரல்களுக்கும் வலுப்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Community Census soon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->