#BREAKING || இந்திய சட்டங்களை "பாரதிய சட்டங்கள்" என பெயர் மாற்ற மசோதா தாக்கல்.!!
Bill filed in Lok Sabha rename Indian laws as Bharathiya laws
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள "இந்திய" எனும் வார்த்தைக்கு பதிலாக "பாரதிய" எனும் வார்த்தையை பயன்படுத்தும் வகையில் சட்ட திருத்தத்தினை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம், CrPC மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பெற பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மூன்று மசோதாக்களை இன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
1) பாரதிய நியாய சன்ஹிதா, 2023
2) பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023
3) பாரதிய சாக்ஷ்ய மசோதா, 2023
ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி மற்றும் சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திருத்தம் செய்வதற்கான மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் முன்வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இந்த மசோதாக்கள் குறித்து பேசி வருகிறார்.
மக்களவையில் பேசிய அமித் ஷா "புதிய மசோதா தேசத்துரோக குற்றத்தை முற்றிலும் ரத்து செய்யும். இருப்பினும் இந்த மசோதாவில் "மாநிலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்ற விதிகள் உள்ளன. மசோதாவின் 150வது பிரிவு "இந்தியாவின் இறையாண்மை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்" பற்றிக் கூறுகிறது என பேசி வருகிறார்.
English Summary
Bill filed in Lok Sabha rename Indian laws as Bharathiya laws