துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா.. ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைப்பு.!
Bill to appoint vice chancellor for state govt
தமிழக சட்டமன்றத்தில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்ட மசோதாவை நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தமிழக அரசு நியமிக்கும் வகையிலும், துணை வேந்தர் நியமனங்களில் கடைபிடிக்கக் கூடிய நடைமுறைகளின் கொண்டுவரவேண்டிய மாறுதல் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இந்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் நேற்றே சபாநாயகர் அலுவலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்ட மசோதாக்கள் சட்டத்துறை மூலமாக ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
English Summary
Bill to appoint vice chancellor for state govt