பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - பிரதமர் மோடி நம்பிக்கை!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆங்கில நாளிதழ்க்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் பிரதமர் மோடி பேசியுள்ளதாவது, நான் எங்கு பிரச்சாரத்துக்கு சென்றாலும் மக்கள் என்மீது அன்பையை பாசத்தையும் அளித்து என்னை உற்சாகமாக வரவேற்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பாஜகக்கு போடும் ஒட்டு இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு போடும் ஒட்டு என்று மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

தென் இந்தியாவில் இந்தமுறை பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தென் மாநிலங்களில் ஆட்சி செய்யும் மாநில கட்சிகள் செய்யும் ஊழலை மக்கள் பார்த்துக்கொண்டு வருகின்றனர். பாஜக கொண்டுவந்துள்ள திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும். தென்மாநிலங்களில் பாஜக வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளது என்று கூறிவுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp 400 pelace win pm modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->