#BigBreaking | திருச்சி சூர்யா சிவா கட்சியிலிருந்து இடைநீக்கம் - அண்ணாமலை அதிரடி!
BJP Annamalai Announce for Trichy suriya 24112022
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை விசாரித்து பாஜக தமிழக தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் கனக சபாபதி தெரிவிக்கப்பட்டு, அதுவரை சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், திருச்சி சூர்யா சிவா கட்சி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
"கட்சியின் மாநிலத் தலைவராக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. சூர்யா சிவாவின் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடி வரும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Announce for Trichy suriya 24112022