நாளை மிக மிக மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


மதுரை: அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்டுவதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் அனுமதி அளித்தது. 

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காத நிலையில், அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், அரிட்டாபட்டி போராட்டக்குழு இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான திட்டத்தை ரத்து செய்ய கோரியுள்ளனர். 

இந்த நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அரிட்டாபட்டி மக்களுக்கு நாளை ஒரு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Arittapatti issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->