போப் ஆண்டவர் இந்தியா வருகிறார்., அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு செய்தி.! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். கிருஸ்துமஸ் பண்டிகையை ஒரு மதம் சார்ந்த நிகழ்வாக இல்லாது மனிதம் சார்ந்த நிகழ்வாக நான் பார்க்கிறேன். 

இன்னா செய்தார்க்கும் இனிவே செய்யாக்கால் என்று நம் வள்ளுவர் சொன்னதை வாழ்ந்து காட்டிய இறைதூதரின் இனிய பிறந்தநாள். இயேசு பிறந்த இந்த நன்னாளில் அனைவரும் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்ந்தோங்கச் செய்து அதன்மூலம் மனிதகுலம் யாவற்றுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முன்வர வேண்டும். 

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் சந்தோஷம், சமாதானம், செழிப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்திட வாழ்த்துகிறேன். கடந்த 2000 ம் ஆண்டு ஜூன் மாதம், மறைந்த பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய், வாடிகன் சென்று அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பாலை சந்தித்தார். 

அதன்பின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், 6 - வது ஜி -20 அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டபோது, தற்போதைய போப் பிரான்சிஸ் அவர்களை சந்தித்தது, வெறும் சம்பிரதாய சந்திப்பாக இல்லாது, ஆரத்தழுவி அன்பு பாராட்டி, அரைமணிக்கும் மேல் அளவளாவியது உலகையே வியப்பில் அழ்த்தியது. 

பெருந்தொற்று நேரத்தில் தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா அளித்த உதவியை போப் ஆண்டவர் பாராட்டினார். மதங்களைக் கடந்த மனித நேயத்தை இருவரும் வெளிப்படுத்தினர். அதைத்தானே ஏசுநாதர் போதித்தார். 

மேலும் நம் பாரதப்பிரதமர் அவர்கள் போற்றுதலுக்குரிய போப் பிரான்ஸிஸ் அவர்களை இந்தியாவிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அதை அன்புடன் அவரும் ஏற்றுக் கொண்டார். ஆக விரைவில் போப் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவே நமக்கு இந்த ஆண்டின் கிருஸ்மஸ் பரிசு, அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை வளர்ந்தோங்கச் செய்ய தன் நடத்தைகளால், நல்வார்த்தைகளால், குழந்தையாக ஏசுநாதர் பிறந்ததினம், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி, சமாதானம், நல்வாழ்வு ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்திட என் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp annamalai Christmas wish


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->