எடப்பாடி பழனிசாமி இப்படி பண்ணி இருக்க கூடாது! வேதனையில் அண்ணாமலை! பரபரப்பு பேட்டி!
BJP Annamalai Condemn to ADMK EPS Karunanithi coin
தமிழ்நாட்டை பொறுத்தவரை எது செய்தாலும் அரசியலாக பேசுவது வழக்கமாகிவிட்டதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்தாவது, "நேற்று அரசு விழாவில் மத்திய அரசின் சார்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ரூ.100 நாணயத்தை வெளியிட்டத்தில் எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சி.
நான் கட்சியின் தலைவராக இருந்தாலும் அடிப்படையில் நான் தொண்டன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கட்சியிடம் சொல்ல முடியாது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என மத்திய அரசு முடிவு செய்த பிறகு மாநில பாஜக முழு ஒத்துழைப்பை கொடுப்பது கடமை. இதில் நாங்கள் அரசியல் கலக்கவில்லை.
மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டு இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் அரசியல் பேசுவது வேதனைக்குரியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை எது செய்தாலும் அரசியலாக பேசுவது வழக்கமாகிவிட்டது.
2017ல் பாஜக, அதிமுக கூட்டணி இல்லாத சமயத்தில் அப்போதைய அதிமுக அரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-க்கு சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என அனுமதி கோரிய போது மத்திய அரசு அனுமதித்தது.
2019ல் பாஜக, அதிமுக கூட்டணிஇருந்த சமயத்தில் தான் அந்த நாணயத்தை அதிமுக வெளியிட்டது. பாஜக ஆட்சியில் இருக்கும் போது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பதையெல்லாம் பார்க்கவில்லை" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
English Summary
BJP Annamalai Condemn to ADMK EPS Karunanithi coin