திமுக ஒரு 'டிராமா கம்பெனி', கருணாநிதி எழுதிய வசனத்தையே மிஞ்சுட்டாங்க - அண்ணாமலை அதிரடி பேட்டி!
BJP Annamalai condemn to DMK MK STalin
வேங்கைவயல் சம்பவத்தில் காவல்துறையின் குற்றப்பத்திரிகை கருணாநிதி எழுதிய வசனத்தை மிஞ்சும் வகையில் உள்ளதாகவும், திமுக 'டிராமா கம்பெனி' என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்தாவது, "வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஆடியோ, வீடியோ வெளியாவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், சிபிஐ விசாரணைக்கு ஏன் திமுக அரசு தயங்குகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், உண்மையாக இருந்தால் சிபிஐ விசாரணைக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
கூட்டணி கட்சிகளான திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இந்த விவகாரத்தை ஏற்கவில்லை என்றும், திமுக போலி செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
திமுகவில் உறுப்பினராக இருக்க படிக்காமல் இருக்க வேண்டும், அமைச்சராக இருக்க பொய் சொல்ல வேண்டும், பெரிய அமைச்சராக இருக்க ஊழல் செய்ய வேண்டும் என்பதே தகுதி என சாடினார்.
ஆர்எஸ்எஸ் தான் காந்தியை கொன்றது என்ற திமுகவின் குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும், அவர்கள் பொய்யிலே பிறந்து ஊழல் செய்வதற்காகவே வாழ்பவர்கள் என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
English Summary
BJP Annamalai condemn to DMK MK STalin