ஆரத்திக்கு பணம் கொடுத்தது உண்மைதான்.. உடைத்துப் பேசிய அண்ணாமலை.!!
BJP Annamalai explain about Viral video
தமிழக பாஜக தலைவர் கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு பணம் வழங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை அடுத்து கோவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் கோவை மாவட்ட ஆட்சியருமான மனோஜ் குமார் இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவு பெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனால் பதறிப் போன கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தான் பணம் கொடுத்ததாக பரவும் வீடியோ உண்மைதான் எனக் கூறியதோடு அதற்கான விளக்கமும் கொடுத்துள்ளார்.
அவர் தனது விளக்கத்தில் "கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது ராமநாதபுரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது கலாச்சாரம். ஆனால் தேர்தல் நேரத்தில் அவ்வாறு செய்யவில்லை.
வாக்குகளுக்காக மற்றவர்களைப் போல பணத்தின் மீது நம்பிக்கை வைக்க மாட்டோம் பழைய வீடியோ தற்போது பரவும் நிலையில் வீடியோவுக்கு நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். உண்மையிலேயே பணப் பரிமாற்றம் நடக்கும் போது கோவை ஆட்சியர் விழிப்புடன் இருக்க வேண்டும்" என விளக்கம் அளித்ததோடு கோவை மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கி உள்ளார் அண்ணாமலை.
English Summary
BJP Annamalai explain about Viral video