அடுத்த ட்விஸ்ட்... தேதியும் இடமும் குறிச்சாச்சு... அண்ணாமலையின் அடுத்த அதிரடி...!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் இன்று தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவை சேர்ந்த மாவட்டச் செயலாளர் முக்கிய நிர்வாகிகள் உட்பட 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏக்கள், தமிழகத்தை சேர்ந்த தேசிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்படும் வகையில் பூத் கமிட்டியை பலப்படுத்துவது, கட்சிக்கு நிதி சேர்ப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் வேங்கை வயல் சம்பவத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும், ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் மாதம் நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இதுகுறித்து தமிழக பாஜக செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்தான ஊழல் பட்டியல், ரபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp Annamalai starts yatra from April 14 at Tiruchendur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->