தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே.. முந்தி கொண்ட பாஜக.!! வெளியான அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில் கூடிய விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தைக் கூடிய விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 21 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

அதேபோன்று பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 39 வேட்பாளர் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. அதில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின மோர்ச்சா தலைவர் லால் சிங் ஆர்யா மத்தியப் பிரதேசத்தின் உள்ள கோஹாத் தொகுதியிலும், பாஜக தேசிய செயலாளர் ஓம்பிரகாஷ் துர்வே மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP announced candidates list for Chhattisgarh MadhyaPradesh elections


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->