ஊழல் திமுகவின் வாக்குறுதி எண்: 503 என்னாச்சு.? திமுகவுக்கு தமிழக பாஜக கேள்வி.!!
BJP ask DMK election manifesto number 503 gas price cut
இந்தியா முழுவதும் அனைத்து வகையான வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் 200 ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் 400 ரூபாய் வரையும், மற்ற பயனாளிகள் 200 ரூபாய் வரையும் மானியம் பெறுவார்கள்.
நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் இந்த சிலிண்டர் விலை குறைப்பை மேற்கோள்காட்டி திமுகவை விமர்சனம் செய்ததோடு, கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ₹200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ₹200 குறைத்து அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ₹200 மானியம் நீட்டிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ₹400 மானியமாகப் பெறுவார்கள்.
இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503-ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்" என திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
BJP ask DMK election manifesto number 503 gas price cut