அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக பாய்ச்சல்.! - Seithipunal
Seithipunal


கோவையில் தனது பண பலத்தின் மூலம் ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கரூர் ஆட்களை வைத்து ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக ஜனநாயகத்தை நம்பி போட்டியிடாமல் கரூரிலிருந்து கூலிக்கு ஆட்களை கூட்டிவந்து,சீருடை அணிவித்து கோவையின் மாண்பிற்கு குந்தகம் விளைவிக்கிறார் செந்தில் பாலாஜி.
வீதி,வீதியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்கள் போல சீருடை அணிந்து,கையில் பணக்கட்டோடு  வாக்காளர்களைத் தேடி அலைகிறார்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள்.
வெளிமாவட்டங்களிலிருந்து பல சொகுசு கார்கள் திமுக கொடியுடன் வலம்வருவதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
பல வார்டுகளில் திமுக சின்னம் பதியப்பட்டு விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.பாஜகவினரின் வாகனங்களில் கொடியை தேடிப்பிடித்து கழட்டும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு திமுக கொடி தெரிவதில்லை.
பல இடங்களில் வார்டு வாரியாக கூலி ஆட்களுக்கு இலட்சக்கணக்கான செலவில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.ஒரு வேட்பாளருக்கு ரூ.85,000 என்று தேர்தல் செலவை நிர்ணயத்த தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் எந்தக்கணக்கில் வைக்கப்போகிறது.
ஜனநாயகத்தை காக்க வேண்டிய தேர்தல் ஆணையம் பணநாயக திமுகவிற்கு துணை போய்க்கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP blames Minister Senthil Balaji


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->