நிதிஷ், சந்திரபாபு நாயுடு இல்லாமலும் ஆட்சியமைப்போம்! பிஜேபியின் சூப்பர் பார்முலா? - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது. கூட்டணி கட்சி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு , நிதிஷ்குமார் ஆகிய இருவரின் கையில்தான் பாஜகவின் ஆட்சி உள்ளநிலையில், இருவரையும் தவிர்த்து புதிய கணக்கு போடும் பாஜக.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்   மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்று  முடிந்தது.

இந்தியாவில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களையும் காங்கிரஸ் தலைமைலான இண்டியா கூட்டணி 234 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. இந்தநிலையில், பாஜக தனித்து 240 தொகுதிகளை கைப்பற்றி உள்ள நிலையில், பெருமான்மைக்கு 272 தேவை என்ற நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பாஜக எதிர்கொக்கி காத்துக்கொண்டிருந்தது.

ஆனால், பாஜக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவு இல்லாமல் எப்படி ஆட்சி அமைப்பது என்று புதிய கணக்கு போட தொடக்கி உள்ளது. ஏனென்றால் ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் இருந்தால் போதுமானது.

பாஜக: 240 ,சிவசேனா: 7 ,எல்ஜேபி: 5 ,ஜேடிஎஸ்: 2 ,RLD: 2 ,ஜனசேனா: 2 ,UPPL: 1 ,ஹாம்: 1 ,ZPM: 1 ,எஸ்கேஎம்: 1 , அப்னா தால்: 1 ஏஜிபி: 1 , AJSU: 1 , என்சிபி: 1 , ஒய்.எஸ்.ஆர்.சி.பி (டி.டி.பி. வெளியேறினால்): 4 , சுயேச்சை (லடாக் & டாமன் & டையு): 2 NDA: 272 JDU & TDP இல்லாமல் இப்படியும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். பாஜக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரிடம் அடிபணியாமல் இருக்க இதுவும் ஒரு  காரணம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP can form government even without support of Chandrababu Naidu and Nitish Kumar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->