"1 லட்சம் பேர் காணவில்லை".. பதறும் பாஜக வேட்பாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6:00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் 6 மணிக்கு முன்பு வாக்கு செலுத்த வந்த பொது மக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7 மணி நிலவரப்படி 72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார். 

குறிப்பாக பாஜகவின் வாக்குகளை மட்டுமே நீக்கி உள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டு இருந்த நிலையில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வமும் மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 

பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்து ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். 

அதன் பிறகு வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டதோடு தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து ஆலோசனைகளும் பெறப்பட்ட பிறகு இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அப்போதெல்லாம் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது பாஜகவினருக்கு தெரியாதா? தேர்தல் நடத்தும் நாளில் தோல்வி பயத்தின் காரணமாக பாஜகவினர் இவ்வாறு குற்றம் சாட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP candidate accused 1 lakh voters missing in Coimbatore Chennai center


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->