அந்த "3,219" வித்தியாசம் இருக்காது.!! திருமாவளவனை சீண்டிய பாஜக வேட்பாளர்.!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 

தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் கார்த்தியாயினி என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். 

அவர் இதற்கு முன்பு அதிமுகவில் வேலூர் மாநகராட்சி மேயராக இருந்துள்ளார். அதன் பிறகு பாஜகவில் சேர்ந்த கார்த்தியாயினி தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

சிதம்பரத்தில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கள் வெற்றி இருக்காது எனவும் அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் எனவும் மறைமுகமாக விசிக தலைவர் திருமாவளவனை விமர்சனம் செய்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும். அது சிறிய எண்ணிக்கையில் இருக்காது. மிக வெற்றியாக இருக்கும். நிச்சயமாக 3,219 வாக்கு வித்தியாசத்தில் எங்கள் வெற்றி இருக்காது. லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கும்" என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP candidate karthiyayini criticized Vck thirumavalavan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->