மதுவை விற்கும் அரசு! நேரம் பார்த்து பாஜக தரப்பிலிருந்து வந்து விழுந்த கமெண்ட்! - Seithipunal
Seithipunal



தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு தடை விதித்த உத்தரவை மீறியதாக சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத் துறை செயலாளர், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வழக்கு விசாரணையின் போது மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என்று தமிழக அரசு வழக்கறிஞரை நோக்கி நீதிபதி தண்டபாணி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கேள்வியை சுட்டிக்காட்டி, பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கனம் நீதிபதி அவர்களே, இது நாள் வரை இல்லாத அந்த சிந்தனையை தூண்டி விட்டு விட்டீர்களே! தனியார் விற்ற போது இருந்த மதுவின் தரம், அரசு விற்கும் போது குறைந்து விட்டது என்கிறார்களே! 

பட்டாசு தொழிலிலும் அரசியல்வாதிகள் புகுந்து விற்க துவங்கினால் நிலைமை விபரீதம் ஆகிவிடாதா? மதுக் கொள்ளையோடு பட்டாசு கொள்ளையும் நடைபெறாதா? பாவம் பட்டாசு தொழிலதிபர்கள்" என்று விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Comment about HC judge statement DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->