ராஜ்யசபாவிலும் ஆதிக்கம் செலுத்தும் பாரதிய ஜனதா கட்சி !! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவையில் 52 இடங்களைக் கொண்ட காங்கிரஸ் அதன் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி 100 ஆகப் பெற்றிருந்தாலும், தற்போது நடந்து முடிந்த பொது தேர்தலில் அதன் உறுப்பினர்கள் இருவர் வெற்றி பெற்றதையடுத்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் எண்ணிக்கையில் சரிவைக் சந்தித்துள்ளது.

28ஆகா இருந்த காங்கிரஸின் இடம் தற்போது ராஜ்ய சபாவில் 26 எம்.பி.க்களாக குறைந்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு வந்த 10 காலியிடங்களில் இருந்து வெற்றி பெறும் என்பதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ராஜ்யசபாவில் எண்ணிக்கையை அதிகரித்து தனது பலத்தை காட்டி உள்ளது.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் போட்டியிட்டாலும், ராஜ்ய சபாவில் தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வகித்து வரும் எதிர்க்கட்சி தலைவர் பதவியைத் தக்கவைக்க முடியவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களான கே.சி.வேணுகோபால் மற்றும் தீபேந்தர் ஹூடா ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிட ராஜ்யசபாவில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், காங்கிரஸ்க்கு பெரிய அடியாக இது விழுந்தது.

இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்படி, ராஜ்ய சபா அல்லது லோக் சபையில் முறையான அங்கீகாரம் பெற, சம்பந்தப்பட்ட தரப்பினர் சபையின் மொத்த பலத்தில் குறைந்தது 10% இருக்க வேண்டும். ஒரு கட்சி 10% இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எந்தக் கட்சியும் குறைந்தபட்சம் 25 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். 

அதாவது 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பெரும்பான்மை மதிப்பெண் 123 ஆகா உள்ளது . ராஜ்ய சபாவில் மொத்தம் உள்ள 245 இடங்களில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளன, அதாவது ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீரில் நான்கு மற்றும் நியமன உறுப்பினர் ஒன்று. இதனால், சட்டசபையின் பலம் 240 ஆகவும், பெரும்பான்மை பலம் 121 ஆகவும் குறைந்துள்ளது.

சமீபத்தில் நடந்த தேர்தலின் பெரும்பான்மை படி, 90 உறுப்பினர்களை கொண்டு பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 26 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் 13 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களை பிடித்து உள்ளன.

மேலும் அஸ்ஸாம், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தலா இரண்டு மற்றும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒன்று என, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ராஜ்யசபாவில் மொத்தம் 10 காலியிடங்கள் உருவாக்கப்பட்டன. 

அதில் 7 எம்பிக்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள், மற்ற இரண்டு பேர் காங்கிரஸையும், மேலும் ஒருவர் ராஷ்டிரிய ஜனதா தளத்தையும் சேர்ந்தவர்கள். மேலவையில் 7 இடங்களையும் பாஜக தக்க வைத்துக் கொள்ளும். மக்களவையில் எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி பலமான நிலையில் இருந்தாலும், ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை வகிப்பது எதிர்க்கட்சிகளை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp dominating in rajyasabha also


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->