அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! அண்ணாமலைக்கு ரபேல் வாட்சை பரிசளித்ததே 'இவர்' தானாம் ..! - பாஜக முன்னாள் நிர்வாகி வெளியிட்ட தகவல்..!!
BJP Former Official Opens Up who Gifted Rafale Watch To Annamalai
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே திமுகவிற்கும், பாஜகவிற்கும் முட்டிக் கொண்டுள்ளது. அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் உச்ச நிலையில் இருந்தது.
அப்போது திடீரெனெ முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை அவரது கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச்சின் விலை மற்றும் வாங்கியதற்கான பில் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். ஆனால் அப்போது அண்ணாமலை அந்த வாட்சிற்கான பில் குறித்து எதுவும் கூறவில்லை.
இது தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு, பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வாட்சை அவரது நண்பரிடம் இருந்து வாங்கியதாகக் கூறி அதற்கான ஒரு பில்லையும் காட்டினார்.
அப்போது இதுகுறித்து அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் பாஜக மூத்த நிர்வாகியான கல்யாண ராமன் கட்சியில் இருந்து ஓராண்டிற்கு நீக்கப்பட்டார். இந்நிலையில் கல்யாண ராமன் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில், "6 லட்சம் மதிப்புள்ள அந்த ரபேல் வாட்சை அதிமுகவைச் சேர்ந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை குடகு மலையில் வைத்து நன்றாக கவனித்துக் கொண்டதற்காக, அண்ணாமலைக்கு அப்போது அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி தான் வழங்கினார். இவர் அண்ணாமலைக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாட்ச்சிற்கு பில் அண்ணாமலையிடம் இல்லை என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியும். கொடுத்தவனே பில் கேட்டதால் அண்ணாமலையால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே தான் வேறு ஒருவர் கட்டியிருந்த வாட்சை பாதி விலைக்கு தான் வாங்கியதாக அண்ணாமலை பொய் கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Former Official Opens Up who Gifted Rafale Watch To Annamalai