திருமாவளவன் கூட்டணி வைத்திருப்பது மதுவிற்பனையை தொடங்கி வைத்த கோபாலபுரத்தில் - எச் ராஜா விமர்சனம்! - Seithipunal
Seithipunal


பாஜக தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள்

தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்து மது விற்பனையை அறிமுகம் செய்த கட்சியோடு கூட்டணி வைப்பார். 

மதுபான ஆலை உரிமையாளர்களுடன் தேர்தல் பிரச்சார மேடையில் கைகோர்ப்பார். 

மதுபான ஆலை உரிமையாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வார். 

ஆனால் அவரே மது ஒழிப்பு மாநாடும் நடத்துவார். 

போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம். 

திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தி இருப்பது உளுந்தூர்பேட்டையில்... 

ஆனால் அவர் கூட்டணி வைத்திருப்பதோ தமிழகத்தில் மதுவிற்பனையை தொடங்கி வைத்த கோபாலபுரத்தில்...

இது என்ன மாதிரியான அரசியலோ தெரியவில்லை? என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP H Raja Condemn to VCK DMK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->