கொந்தளித்த நடிகை சமந்தா! வாபஸ் பெற்ற அமைச்சர்! - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தா - நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா திருமண விவாகரத்து விவாகரத்தில், எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ்வின் மகனுன் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று, தெலுங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையானது. 

இதற்க்கு நடிகர் நாகார்ஜுனா தனது கண்டனத்தை தெரிவித்து, அவர் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர் தரப்பினரை (எதிர்க்கட்சியை) விமர்சிக்க நடிகர்களின் வாழ்க்கையை பயன்படுத்த வேண்டாம். முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் எனது குடும்பம் குறித்து கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானது. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்து உங்கள் கருத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்" என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதேபோல், நடிகை சமந்தா இதுகுறித்து தெரிவிக்கையில், "எனது விவாகரத்து பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது. விவாகரத்தில் எந்தவித அரசியல் சதியும், குறுக்கீடும் இல்லை. எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம். 

அடுத்தவர்களின் சொந்த விஷயங்களைப் பற்றி பேசும்பொழுது பொறுப்பாக இருக்க வேண்டும். தயவுசெய்து என் பெயரை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். நான் எப்பொழுதும் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இருப்பேன்" என்று சமந்தா தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தாவிற்கு பதில் கொடுத்து பேட்டியளித்துள்ளார். அதில், "எனது கருத்துக்கள் ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதை கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல சமந்தா. 

நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக ஒரு லட்சியவாதியாகவே தெரிகிறீர்கள். எனது கருத்துக்களால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டால், எனது கருத்துக்களை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன்.. 

வேறுவிதமாக இதை பெரிதாக நினைக்க வேண்டாம்" என்று அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha Naga Chaitanya KT Rama Rao KondaSurekha


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->