நீங்கள் அழிந்து போவீர்கள்! உதயநிதியை நேரடியாகவே தாக்கிய பவன் கல்யாண்! - Seithipunal
Seithipunal


சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. ஆனால் நீங்கள் அழிந்து போவீர்கள் என்று, ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசி உள்ளார். 

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு, பவன் கல்யாண் திருப்பதியில் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

அவரின் அந்த பேச்சில், அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர் வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்கிறார்.

சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொல்பவர்கள் தான் அழிந்து போவார்கள். சனாதன தர்மத்தை தாக்கிப் பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதச்சார்பின்மை ஆகாது" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, திருப்பதி லட்டு சர்ச்சைகள் குறித்து கருத்து கூற மறுத்த நடிகர் கார்த்திக்கையை பவன் கல்யாண் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக துணை முதல்வரை எச்சரிக்கும் வகையில், சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொல்பவர்கள் தான் அழிந்து போவார்கள் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pavan Kalyan Condemn to DMK Udhay


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->