பேசாம விஜய் திமுகவில் இணைந்திருக்கலாம், எதுக்கு தனி கட்சி?! - காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் காங்கிரஸ் அல்லது திமுகவில் இணைந்திருக்கலாம், எதுக்கு தனி கட்சி தொடன்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தாவது, "முழு மது விலக்கு இந்தியாவில் இருந்தது இல்லை.

மதுவிலக்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது, முழுமையான மது விலக்கு இந்தியாவில் இருந்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் பர்மீட் முறையில் மது விலக்கு இருந்தது.

முழுமையான மது விலக்கு வேண்டும் என்றால் மக்கள் தாங்கள் செய்யும் தவறுகளை உணர்ந்து திருந்தினால் மட்டுமே மது விலக்கு முழுமையாக கொண்டு வர முடியும்.

நடிகர் விஜய்-ஐ மகனாக பார்க்கிறேன். நீட் எதிர்ப்பு, மாநில சுயாட்சி உள்ளிட்டவற்றை பேசும் விஜய் அதே கொள்கைகளை கொண்ட காங்கிரஸ், திமுகவில் இணைந்திருக்கலாம்.

எதற்காக தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும். விஜய்-ன் நடிப்பை விட நடனம் மிகவும் பிடிக்கும்" என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS Elangovan Congress say about TVK Vijay DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->