#DMKLiquorScam: பாட்டிலுக்கு ரூ.40... டேக் போட்டுகேள்வி எழுப்பிய ஹெச். ராஜா!
BJP H Raja say DMK Liquor Scam
டாசமாக் கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக விற்கப்படும் தொகை யார் யாருக்கெல்லாம் செல்கிறது? என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பாட்டில் விலை ரூ.200, ஆனால் ரூ.240 கொடுக்க வேண்டுமாம்". முன்பெல்லாம் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்தவர்கள் இப்போது 40 ரூபாய் அதிகமாக வசூலித்து வருகிறார்கள்?
ஒரு பாட்டிலுக்கு 40 ரூபாய் கூடுதல் வசூல் என்றால்?
தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 40 ரூபாய் என கணக்கிட்டால் அதில் மட்டும் எத்தனை கோடி கூடுதல் தொகை வரும்?
ஒரு மாதத்திற்கு எத்தனை கோடி வரும்? ஒரு வருடத்திற்கு எத்தனை கோடி வரும்? அந்த தொகை யார் யாருக்கெல்லாம் செல்கிறது? என்று ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP H Raja say DMK Liquor Scam