என் மீது வெறுப்பு பிரசாரம் செய்ய பாஜக ரூ.500 கோடி செலவு செய்துள்ளது!...ஜார்க்கண்ட் முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில்,
மீதமுள்ள 38  தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்க அறிக்கையில், ஊரின் மையப்பகுதியில் உட்கார்ந்து பாஜவுக்கு ஆதரவாகவும், என்னை பற்றியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு எதிராக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு கிசுகிசு பிரசாரங்களை செய்ய ஏராளமானவர்களை இந்த தேர்தலின்போது  பாஜக களமிறக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு மட்டுமே ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக பாஜக செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தங்கள் பொய்களை பரப்ப 95 ஆயிரம் வாட்ஸ் அப் குழுக்களை பாஜக உருவாக்கி உள்ளதாக கூறியுள்ளார்.

இவ்வாறு எனக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்துக்கு மட்டும் ரூ. 500 கோடியை பாஜக கொட்டி கொடுத்துள்ளதாகவும், பாஜகவின் பொய், வெறுப்பு பிரசாரத்தை தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp has spent rupees 500 crores to spread hate against me jharkhand chief minister sensational allegation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->