திமுக அரசிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய பாஜக.!! - Seithipunal
Seithipunal


தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டது. 

வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். ஆனால் அங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை தரப்பு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போக்குவரத்து பிரச்சினை காரணமாக வடசென்னை தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென் சென்னை கிழக்கு ஆகிய ஏழு மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும் படி காவல்துறை தரப்பு கூறியுள்ளது. 

இதற்கு பாஜக தலைமை ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது. 

இங்கு நடக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தங்குகிறார். மாவட்டங்களில் நடக்கும் உண்ணாவிரத போராட்டங்களுக்கு மாவட்ட தலைவர்கள், எம்எல்ஏக்கள் தலைமை தங்குகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Hunger Strike in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->