மாநிலங்களின் அதிகாரத்தை பாஜக குறைக்கிறது!...ஜம்மு-காஷ்மீரில் மன்னர் ஆட்சி நடக்கிறது! - ராகுல் காந்தி!
BJP is reducing the power of the states Monarchy rule is going on in Jammu and Kashmir Rahul Gandhi
ஜம்மு-காஷ்மீரில் இந்த மாதம் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வரும் செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதி வரை என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கட்சிகள் இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. இருந்த போதிலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.
தொடர்ந்து பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் முயற்சித்தனர்.
அதன்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பன் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ஜம்மு - காஷ்மீரில் மன்னர் ஆட்சி உள்ளதாகவும், கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல நினைத்து செயல்படுவதாக தெரிவித்த அவர், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதே எங்கள் முதல் வேலை என்று கூறினார். மேலும் மாநில அதிகாரத்தை குறைத்து, யூனியன் பிரதேசமாக மாற்றும் வேலையில் பாஜக ஈடுபடுபடுவதாக கூறிய அவர், பாஜக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இந்தியா கூட்டணி பெற்றுத் தரும் என்று வாக்கு சேகரித்தார்.
English Summary
BJP is reducing the power of the states Monarchy rule is going on in Jammu and Kashmir Rahul Gandhi