திமுகவின் கிளை போல் செயல்படும் காலாவதியான கம்யூனிஸ்டுகள்.. பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்..!! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக அழைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் பாஜக நிர்வாகியின் கைதை கண்டித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "பொய்யையும், பீதியையும் பரப்புவதா ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜிவ் சந்திரசேகரின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா? வதந்தி உங்களின் ஆயுதம். உண்மை எங்களின் கவசம்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "2018 முதல் 2022 வரை, தமிழகத்தில் மட்டும் 52 தூய்மைப் பணியாளர்கள், பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே உச்சகட்ட உயிரிழப்பு தமிழகத்தில் தான். பெண்ணாடம் பேரூராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர் ஒரு தூய்மைப் பணியாளரை மலம் கழிந்த கழிவு நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து அவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடையக் காரணமாக இருந்துள்ளார். குற்றம் செய்த அந்த பேரூராட்சி உறுப்பினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், இதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் மாநிலச் செயலாளர் திரு எஸ்.ஜி சூரியா அவர்களைக் கைது செய்துள்ளனர்.

பொதுவுடைமை என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட, தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்த விதத் தகுதியும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்ட்டுகள் திமுகவின் கிளை அலுவலகமாகத்தான் செயல்படுகின்றனர். வியர்வை சிந்தி வேலை செய்யும் தொழிலாளர்களிடம், பெயரளவில் சமூக நீதி பேசிக் காலம் காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலாவதியான கம்யூனிஸ்ட்டுகள். பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு" என கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader Annamalai said communists acting like DMK branches


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->