காங்கிரஸ் இப்போது தேசியக் கட்சி இல்லை அண்ணன்,தங்கையின் கட்சி - ராகுலை சாடும் ஜெ.பி.நட்டா!
bjp leader say about rahul and congress stand
ஹரியாணாவில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் பின்னர் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பேசலாம் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
"கட்சிக்காக 50 ஆண்டு காலம் தங்களது ரத்தம் சிந்தி உழைத்தவர்களை காங்கிரஸ் கைவிட்டு விட்டது. காங்கிரஸ் இப்போது தேசியக் கட்சியும் இல்லை பிராந்தியக் கட்சியும் இல்லை. காங்கிரஸ் தற்போது அண்ணன் - தங்கையின் கட்சியாக மாறியுள்ளது.
கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவது அவர்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மையைக் காட்டுகிறது. காங்கிரஸ் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பின்னர், பாரத் ஜோடா பாத யாத்திரை குறித்து பேசலாம்.
பாஜக அரசு மக்களின் வா கைழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக உழைக்கிறது. சில கட்சிகள் தங்களது நலன் மற்றும் தங்களது குடும்ப நலனை மட்டுமே யோசிக்கின்றனர். ஆனால், பாஜக அரசோ நாட்டின் நலனையும், நாட்டு மக்களின் நலனையும் குறித்து சிந்திக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் நாட்டிற்காக உழைக்கிறோம். ஆனால், குடும்பக் கட்சிகள் அவர்களது குடும்பத்திற்காக மட்டுமே உழைக்கின்றனர்". என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp leader say about rahul and congress stand