மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சகட்ட கொந்தளிப்பில் பாஜக தலைவர்கள்!
BJP leaders say Mamta Banerjee should be apologies
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்து, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையே, தில்லி ரயில்வே நிலையத்தில் கும்பமேளா புனித நீராடச் செல்ல விரும்பிய பக்தர்கள் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
சட்டப்பேரவையில் இதுகுறித்து மமதா பானர்ஜி, “மகா கும்பமேளாவுக்காக பெரிய திரளான மக்கள் வருவதை அறிவித்தும், உத்தரப்பிரதேச அரசு போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் பலர் உயிரிழந்தனர், இந்த நிகழ்வு ‘மரண’ கும்பமேளாவாக மாறிவிட்டது” என்று பேசியிருந்தார்.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில தலைவர் சுகந்த மஜும்தார், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸிடம் மமதாவின் பேச்சை சட்டப்பேரவை பதிவிலிருந்து நீக்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மமதா பானர்ஜி இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
BJP leaders say Mamta Banerjee should be apologies