பாஜகவில் விரிசல்! மாநில தலைமை மீது புகார்! நாளை அமித் ஷாவை சந்திக்கும் எம்.எல்.ஏகள்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் பாஜக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திந்து அமைச்சர்கள் மீது புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மற்றும்  என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

தோல்விக்கு பொறுப்பெற்று அமைச்சர்களை மாற்ற வேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி  தூக்கினார். புதுச்சேரி மாநிலம் பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி உடன் டெல்லி சென்று ஜே பி நட்டா, கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் ஆகியோரை சந்தித்தனர். ஆனால் உள்துறை அமைச்சர் சந்திக்க முடியாமல் திரும்பி வந்தனர்.

பாஜக மாநில பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட நிர்மல் குமார் நடத்திப் பேச்சுவார்த்தை தோல்வி முடிந்துள்ளது. சமீபத்தில் புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் மீதும் அமைச்சர்கள் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புதுச்சேரி முதலமைச்சர் மீதும் அமைச்சர்கள் மீதும் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP legislators from Puducherry will meet Union Home Minister Amit Shah in Delhi tomorrow


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->